search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை வரன்முறைப்படுத்துதல்"

    • 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
    • 120 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கிராம ஊராட்சிகளான கணபதிபாளையம்,கரைப்புதூர் ஊராட்சிகளில்,கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்தல் சிறப்பு முகாம் கணபதிபாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 120 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்,கணபதி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், கரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, கணபதி பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கணபதிபாளையம் பிரபு சங்கர், கரைப்புதூர் காந்திராஜ், வார்டு மெம்பர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வருகிற 1-ந்தேதி காலை 10-30 மணி முதல் மாலை 4-30 மணி வரை மண்டல வாரியாக முகாம் நடக்கிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற வீட்டுமனைகள், வீட்டு மனை பிரிவுகள் வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி காலை 10-30 மணி முதல்  மாலை 4-30மணி வரை மண்டல வாரியாக இதற்கான முகாம் நடக்கிறது.

    வரன்முறைக்கு விண்ணப்பிக்கும் மனைக்கான பத்திர நகல், 2016-ம் ஆண்டுக்கு முந்தைய மூலப்பத்திர நகல், பட்டா, சிட்டா அடங்கல், மனைப்பிரிவு  வரைபடம், வில்லங்க சான்று நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    வார்டு எண் 1 முதல் 15 வரையிலான பகுதிகளுக்கு அம்மன் கலையரங்கம், சிறுபூலுவப்பட்டி ரோடு, தொடர்பு அலுவலர் ஹரி-98947 44571.

    வார்டு எண் 16-30, நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகம், தொடர்புக்கு-98947 47571.

    வார்டு எண் 31-45, பள்ளக்காட்டு புதூர், சோளியம்மன்  கோவில் மண்டபம், தொடர்புக்கு ஆறுமுகம்-98422 72494.

    வார்டு எண் 46-60. எஸ்.ஆர். நகர் , ரத்தின விநாயகர் கோவில் மண்டபம்,  தொடர்புக்கு 86438 51051. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
    ×